Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காரில் கடத்திய 226 கிலோ குட்கா பறிமுதல்

காரில் கடத்திய 226 கிலோ குட்கா பறிமுதல்

காரில் இருந்த 226 கிலோ குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 226 கிலோ குட்காவை சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீஸார் லாலாபேட்டை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் மூட்டை மூட்டையாக காரில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 226 கிலோ குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக சென்னைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ரமேஷை கைது செய்தனர்.

முந்தைய செய்தி
Airlines seek fair returns amid rising airport costs: IndiGo CEO
அடுத்த செய்தி
கடனைக் குறைத்த Radico Khaitan

தொடர்புடைய செய்திகள்